அஸ்ட்ரோ நியுமராலஜி - விளக்கம்


அஸ்ட்ரோ நியுமராலஜி

பெயர் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் ஆயுள் முழுவதும் அவரை குறிப்பிடுகின்ற மிக முக்கியமான அடையாளம் ஆகும்.உச்சரிப்பு என்பது ஒலி அலைகளின் அதிர்வாகும்.ஒலி அலைகளின் மாறுபட்ட அதிர்வுகளே நமக்கு மொழி என்பதன் அடையாளமாக காதில் உணரப்படுகிறது.


பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் மூத்த ஜோதிட அறிஞர்கள் இந்த ஒலி அலைகளின் அதிர்வுகளை கிரகங்களுடன் இணைந்து ஆராய்ந்து வந்தனர்.அதன் விளைவாகத்தோன்றியதுதான் மந்திர உச்சாடனைகள்,கோயில்களில் நல்ல மந்திர உச்சாடனைகள்,நல்ல ஒலி அதிர்வுகளை உண்டாக்குகின்றன.எனவேதான் அம்மந்திரங்களுடன் (அர்ச்சனை) நம் பெயர்களையும்,பிறந்த நட்சத்திரங்களின் பெயர்களையும் இணைத்து உச்சரிக்க நாம் விரும்புகிறோம்.


அந்தக்காலங்களில் இப்போது போல நவீன யுக்திகள் இல்லாத காரணத்தால் நட்சத்திரங்களுக்கு குறிக்கப்பட்டுள்ள (பஞ்சாக்கத்தின் படி) எழுத்துக்களின்படி மட்டுமே பெயர் வைக்க வேண்டியிருந்தது.பின்னர் எண்கணிதம் எனப்படும் நியூமரலாஜி என்ற ஜாதகத்தின் உட்பிரிவு கண்டுபிடிக்கப்பட்ட பின்பு பெயர் வைக்கும் முறையில் முன்னேற்றம் வந்தது,


எந்தக்குழந்தையின் பெயரையும் நீளமாக வைத்துவிட்டு, பின்னர் அதை சுருக்கிக்கூப்பிடுவதால் பலன்கள் கண்டிப்பாய் மாறுபடும். உதாரணத்திற்கு, K.ராஜ் குமார் என்று வைத்து விட்டு ராஜ் அந்த பெயர் உச்சரிக்கப்படுவதல் நிச்சயமாக பலன்கள் மாறும்.


மேலும்,ஒரு குழந்தைக்கு,அது வளரும் வரையில் அதாவது 20-25 வயது ஆகும் வரை தாய்,தந்தை கூட இனிஷியலுடன் பெயரை உச்சரிப்பதில்லை.எனவே இனிஷியல் இல்லாமலே முதலில் பெயர் நன்றாக அமைய வேண்டும்.இனிஷியல் இல்லாமல் உச்சரிக்கப்படும்போதே அதிர்வுறும் ஒலி அலைகள் குழந்தைக்கு நன்மைகள் செய்யவேண்டும்.பின்னர் அக்குழந்தை பட்டப்படிப்புக்குப்பின் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கலாம்(I.A.S.,I.P.S மற்றும் நிறுவனத்தில் General Manager)அல்லது சிறந்த தொழில் அதிபராக ஆகலாம்.அப்போது கையெழுத்து(Signature)நிறையப்போடவேண்டியது வரும்.


விளக்கம்

ஒரு நாளைக்கு 50-100 கையெழுத்து வரை போடும்போது அதிர்வுறும் ஒலி அலைகள் மீண்டும் மாறுபட்ட பலன்களை தரத்தொடங்கும்.


எனவே பெயரில்,
1) இனிஷியல் இல்லாத நிலை
2) இனிஷியல் இணைக்கப்பட்ட நிலை


என்ற இரு நிலைகளிலும்,பெயர் வைக்கப்படுபவருக்கு ஒலி அலைகளால் நன்மைகள் நடைபெற வேண்டும் என்பது தெளிவாகிறது.மேலும்,பிரமீடு என்ற துல்லியமான முறையில் ஆராய்ச்சி செய்து இரு நிலைகளிலும், பெயர் வைக்கப்படுபவரின் ஜாதக ரீதியாக இம்முறையில் பெயர் சரிசெய்யப்படும்போது எதிர்காலத்தில் பெயர் உச்சரிப்பினால் நல்ல பலன்கள் மட்டுமே நடைபெறும்.பெயர் வைக்கப்படும்போது எண்கணித முறை மட்டுமே முழுப்பலன்களையும் நிச்சயமாகத்தர முடியாது.அவர்களின் ஜெனன ஜாதகத்தை கண்டிப்பாக ஆராய்ந்து தான் பெயர் வைக்கப்பட வேண்டும்.


எண்கணிதம்(Numerology) மற்றும் ஜோதிடம் (Astrology)ஆகிய இரண்டும் இணைந்ததே அஸ்ட்ரோ நியூமரலாஜி (Astro Numarology)எனப்படும்.


இம்முறையில் பெயர் வைக்கப்படும் போது அல்லது சரிசெய்யப்படும்போது பெயர் உச்சரிக்கப்படும்போது அதிர்வுறும் அலைவரிசைகள் ஆயுள் முழுவதும் நல்ல பலன்களைத்தரும்.

Sample New Name Click Here For Sample New Name Details