அஸ்ட்ரோ நீயுமராலஜீ மற்றும் பிரமீடு முறையில் குழந்தைக்கு பெயர் வைக்க


ஸ்ரீ அங்காளம்மன் எண்கணித மற்றும் ஜோதிட ஆராய்ச்சி நிலையம்

Astro Numerology

பிறந்த ஆண்குழந்தை பெயர்
S/O. R.Gurusamy, Chithra
D.O.B - 04.10.2010 - @ 9.55AM


விருச்சிக லக்னம்
கடக ராசி
ஆயில்யம் நட்சத்திரம்
குண எண் (Personality number) - 4 ராகு)
விதி எண் (Life number) - 8 (சனி)


பிறப்பு எண் - 4 (எண் கணிதப்பலன்)
4 ம் எண்ணின் ஆதிக்கக் கோள் இராகு ஆகும். இவர்களின் பெரும்பாலோர் நடுத்தர உயரமுடையவர்களகவே இருப்பார்.இரட்டை நாடி உடையவர்கள் ஆகவும், கண்கள் சிறியதாகவும் காணப்படுவார்கள்.பெரிய தலை அடர்த்தியான தலைமுடியும் கொண்டவர்களாக இருப்பர்கள். மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.அதே சமயம் மிகவும் உணர்ச்சி வசப் படக் கூடியவர்கல். நல்ல பேச்சாளர்கள். எழுத்தாலும் பேச்சாலும் சமூகத்தை சீர் திருத்த பார்ப்பார்கள். எப்போதும் மற்றவர்கல் பேசும் வார்த்தைக்கு எதிர் வார்த்தையே பேசுவார்கள். எவரையும் நம்ப மாட்டார்கள். நங்கு தீர விசாரித்த பின்னரே நம்பும் தன்மை கொண்டவர்கள். அதிக நண்பர்கள் இவருக்கு இருக்க மாட்டார்கள். அதிக அளவு புத்தி கூர்மை உள்ளவர்கள். எனவே வாழ்க்கையை தீவிரமாக ஆராயும் தன்மை கொண்டவர்கள். எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள்.


ஒரு செயலில் ஈடுபட்டால் அதை முடிக்கும் வரை ஓய மாட்டர்கள். அதிக அளவில் பணம் சம்பாதிப்பார்கள். ஆனால் சேமிக்கும் பழக்கம் இவர்களிடம் இல்லை. கையில் பணம் இல்லாவிட்டாலும் மிக்க மகிழ்ச்சி உடனேயே இருப்பார்கள். பொறாமை இவர்களிடம் கிடையாது. சிறு வயதில் ஓடி வாழ்வதிலும் , சுகமான வழ்க்கையிலும் , முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்


ஆனால் வயது ஆக ஆக வேதாந்த எண்ணங்களில் தோன்றி அதில் ஈடுபடுவார்கள். அரசியல், சட்டம், மருத்துவத்துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். தரகுத் தொழிலும் லாபமுடையதே. காதல் என்பதே சிந்திப்பதற்கே நேரம் இல்லாதவர்கள்.


ஆனாலும் இளம் வயதிலேயே இவர்களுக்கு திருமணம் நடைபெற்று விடும்.பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாகவே இருக்கும். இவர்களில் பெரும்பாலோருக்கு பித்தத் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.


4ந் தேதியில் பிறந்தவர்கள் துணிச்சலும், பலமும் மிக்கவர்கள்.அதிக அளவு கண்டிப்பு தன்மை கொண்டவர்கள். உணவு உண்பதிலும் இல்லறத்திலும் மிதமாக இருக்க வேண்டியது அவசியம். இனிமையாகவும், கவர்ச்சியாகவும் பேச பழகுதல் நன்மை பயக்கும்.


சிறப்பு பலன்::::
பிறப்பு என் 4ஐப் பெற்று திங்கட் கிழ்மையில் பிறந்தவர்கள் பிறரை வெகு சிக்கிரமாக கவர்ந்து விடக் கூடியவர்கள்.அதனால் இவர்களுக்கு அதிக நண்பர்கள் ஏற்படுவார்கள். ஆனால் வசதியானவர்கள் நட்பு ஏற்படுமே அன்றி பயனற்றவர்கள் நட்பு ஏற்படாது.பிறருக்கு உதவக் கூடிய நல்ல மனமிருக்கும்.


பிறரை தூற்றவோ, பழிக்கவோ செய்ய மாட்டர்கள். தன் காரியத்தில் கண்ணாக இருப்பார்கள்.பிறரிடம் ஏமாற்ற மாட்டார்கள்.எந்த காரியத்தை எடுத்தாலும் அதை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பார்கள்.மனோ தைரியம் மிகுந்தவர்கள். இவர்கள் குறைந்த கல்வி அறிவு பெற்றவர்களாகவே இருப்பார்கள்.


விளக்கம்

விதி எண் - 8 (எண் கணிதப்பலன்)
இந்த எண்ணுக்குரிய கோள் காரி (சனி). எனவே சனி கோளுக்கான குணாதிசியங்கள் இவர்களிடத்தில் காணப்படும்.எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பர். பொதுவாக மற்றவர்கள் இவர்களை தவறாகவே எடை போடுவர். எனவே இவர்கள் தனிமையையே விரும்புவர்.எதிலும் நிதானமாகவே இருப்பர். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்காது.அப்படியே ஈடுபட்டாலும் அதில் ஒரு வெறித்தனம் இருக்கும்.


இவர்கள் இரும்பு, நிலக்கரி, கட்டிட ஒப்பந்தம் போன்ற தொழில்களில் ஈடுபட்டால் இலாபமடைவர். வாழ்க்கையின் முற்பகுதியில் பிரச்சனைகள் அதிகமிருக்கும். ஆனால் பிற்பகுதியில் பிரச்சனைகள் திர்ந்து சாந்தமான வாழ்க்கை அமையும்.


பெயர் எண் - 27 - C.G.Gokul (எண் கணிதப்பலன்)
பொதுவாக நல்ல பலனே தரும் எண். எந்த தொழிலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி தரும் எண். வாழ்வில் உன்னதமான நிலையைத் தரும் எண். தனக்கு மட்டும் அல்லாது பிறருக்காகவும் அயராது உழைப்பர். கூடிய வரை பிறர் ஆலோசனைகளை கேட்காமலே செயல் புரிவது நல்லது. கலைகளிலும் நல்ல ஈடுபாடு உண்டாகும்


பெயர் எண் - 21 - Gokul (எண் கணிதப்பலன்)
இந்த எண் பெயர் எண்ணாக அமைந்தவர்கள் செல்வம், செல்வாக்கு, புகழ் எல்லாம் பெற்றிருப்பர். வாழ்க்கையின் பிற்பகுதி சாதனை நிறைந்தும் இருக்கும்.எதிர் காலம் சிறப்பாக இருக்கும்


பிரமீடு முறையில் கணிதம்
உலகிலேயே அதிஉன்னதமான கலையாகிய ஜோதிடக்கலையின் உட்பிரிவுகளில் ஒன்றாகிய பிரமீடு முறையின் மூலம் தங்கள் குழந்தையின் ஜெனன ஜாதகத்தை ஆராய்ந்ததில் C.G.Gokul என்று இனிஷியலுடன் அழைக்கும் முறையில் அதிர்வுறும் ஒளி அலைகள் குழந்தையின் ஜெனன லக்னமான விருச்சிகத்திற்கு 3மிடம் என்னும் தைரிய ராசியான மகர ராசியை குறிப்பதாலும் , Gokul என்று இனிஷியல் இல்லாமல் அனைவரும் அழைக்கும் முறையில் 4ம் வீடு என்னும் கேந்திர ஸ்தான ராசியான கும்ப ராசியையும் குறிப்பதாலும் இனி வரும் காலங்களில் குழந்தைக்கு பெயர் உச்சரிப்பினால் வரும் அனைத்து மாற்றங்களும் நன்மையானதாகவே இருக்கும்.


வளமான வாழ்விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சுபம்

New Child Name Sample - Astronumerology With Pramid System Click Here For Sample